Ads

செவ்வாய், 4 டிசம்பர், 2012


சனி, 16 ஜூன், 2012

தமிழக அரசின் துரோகத்திற்கு எதிராக ”மாபெரும் முற்றுகை போராட்டம்


சென்னை,ஜுன்14: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கினைந்த சென்னை மாவட்டம் சார்பாக  இடஒதுக்கீட்டில் முஸ்லிமகளுக்கு அநீதி இழைத்ததமிழக அரசின் பச்சை துரோகத்திற்கு எதிராக ”மாபெரும் முற்றுகை போராட்டம்” சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகில் நடைப்பெற்றது. ஆயிரகாணக்கனேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை காட்டிணர். 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதில் மாநில செயலாளர் சகோ.யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்...



இந்த போராட்டத்திற்கு பிறகும் இடஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வந்தால் தமிழகமே கிடு கிடுக்கிற அளவிற்கு TNTJ போராட்டத்தை அறிவிக்கும் என்று உரையில்

திங்கள், 23 ஜனவரி, 2012

மனிதா! உன்னை புரிந்துகொள்!

பிறவிக் கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமாகும். அதிலும் மனிதராய்ப் பிறப்பது மகத்தான அருட்கொடையாகும். ஏக இறைவனின் உள்ளமையையும், வல்லமையையும் பறைசாற்றும் அற்புத அத்தாட்சிகளில் ஒன்றாக மனித இனம் விளங்குகிறது.

எந்த ஒரு பொருளுமாக இல்லாதிருந்த நிலையிலிருந்து மனிதன் என்ற உள்ளமைக்கு அல்லாஹ் படைத்தான்.

படைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாய் கருதாமல், மனித இனம் சிந்திக்கவும் செயல்படவும் அறிவையும், ஆற்றலையும் தந்தான்.

அந்த அறிவையும், ஆற்றலையும் மனித இனம் தன் மனம்போன போக்கில் பயன்படுத்துமேயானால், அவை நஷ்டத்துக்கு ஆளாகிவிடும் என்று மகத்தான தன் கருணையால் தன்புறத்திலிருந்து பிரகாசமான வேதத்தையும் உயர்மிகு திருத்தூதர்களின் ஞான உபதேசங்களையும் தந்து அவற்றைக் கொண்டு செயல்பட அழைக்கிறான்.

விரைவாக முன்னேற வேண்டுமென்ற உந்துதலுக்கும், பேராசைக்கும் ஆட்படும் மனிதனோ நறுமணமிக்க மார்க்கத்தின் எந்த வாசனையையும் எடுத்துக் கொள்ள தயாரில்லை.