Ads

சனி, 16 ஜூன், 2012

தமிழக அரசின் துரோகத்திற்கு எதிராக ”மாபெரும் முற்றுகை போராட்டம்


சென்னை,ஜுன்14: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கினைந்த சென்னை மாவட்டம் சார்பாக  இடஒதுக்கீட்டில் முஸ்லிமகளுக்கு அநீதி இழைத்ததமிழக அரசின் பச்சை துரோகத்திற்கு எதிராக ”மாபெரும் முற்றுகை போராட்டம்” சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகில் நடைப்பெற்றது. ஆயிரகாணக்கனேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை காட்டிணர். 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதில் மாநில செயலாளர் சகோ.யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்...



இந்த போராட்டத்திற்கு பிறகும் இடஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வந்தால் தமிழகமே கிடு கிடுக்கிற அளவிற்கு TNTJ போராட்டத்தை அறிவிக்கும் என்று உரையில் குறிப்பிட்டார்.





போரட்ட நிகழ்வுகளை புதிய தலைமுறை, கலைஞர் செய்தி மற்றும் சன் செய்தியில் ஒளிபரப்பட்டது.  இன்று வேலை நாள் என்றாலும் தங்களின் பணிகளுக்கு விடுப்பு அளித்துவிட்டு உரிமையை மீட்க கலந்து கொண்ட என் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.




இன்ஷாஅல்லாஹ் இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உரிய முறையில் கிடைக்க நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் துஆ செய்வோம்!

- TNTJPNO.COM
சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றுகைப் போராட்டம் என்றாலும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.
இதை கண்டித்து இன்று (14-6-2012) காலை சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
புகைப்படங்கள் 







www.tntj.net 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக